சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் தப்பிய 8 பேர் கொண்ட குடும்பம்.. "வெட்கம்... வெட்கம்" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிர்வாகம்

0 545

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் இந்திய மதிப்பில் 34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட 8 பேர் கொண்ட குடும்பம், காசு கொடுக்காமல் தப்பிச் சென்றது.

பணம் செலுத்துவதுபோல கார்டை இரண்டு முறை தேய்த்தும் பரிவர்த்தனை மறுக்கப்பட்ட நிலையில், தனது மகனை விட்டுச் சென்று வேறு கார்டு எடுத்து வருவதாக 7 பேர் வெளியேறினர்.

பின்னர், மகனும் ஃபோன் பேசியபடி நழுவிய நிலையில், அந்த குடும்பம் முன்பதிவு செய்ய அளித்திருந்த ஃபோன் நம்பர் போலி என தெரிய வந்ததாக உணவக நிர்வாகம் கூறியுள்ளது.

இது குறித்த உணவக நிர்வாகத்தின் சமூக வலைப்பதிவின் மீது ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments